கோவை சிறையில் கைதிகள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - வரும் 9ம் தேதி ஆர்ப்பாட்டம்

சிறை காவலர்கள் தாக்குதலில் கைதிகளுக்கு கை, கால்கள் , தொடை, முதுகை பகுதிகளில் கடுமையாக பாதிப்பு இருப்பதாகவும், கோவை மத்திய சிறை வார்டன்கள் சிவகுமார், கணேஷ், ராகுல் , சடையன், மோகன்ராஜ், கிருபாகரன் ஆகியோர் கைதிகளை கடுமையாக தாக்கியுள்ளதாகவும், வேறு எந்த சிறை வளாகத்தில் இல்லாத வகையில் சிறையில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகவும் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மத்திய சிறையில் 7 பேர் காவலர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வரும் 9 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

கோவை மத்திய சிறையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கைதிகளுக்கும், சிறை காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கைதிகள் 7 பேர் மீது பந்தைய சாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.



வழக்கு தொடர்பாக இன்று கோவை மத்திய சிறையில் கைதிகளை வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் சிறைவாயிலில் வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசியவர்,



கடந்த 21.9.23ம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு கோவை மத்திய சிறை விசாரணை கைதிகள் 7 பேர் சிறை காவலர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டு, பிளேடால் அறுக்கப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீது உயர் நீதிமன்றம், கைதிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்திரவிட்டுள்ளதன் அடிப்படையில், கைதிகள் 7 பேரை யார் யார் தாக்கினார்கள், எந்த ஆயுதத்தால் தாக்கினார்கள், எப்படி தாக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக சிறைவளாகத்தில் பாதிக்கபட்ட கைதிகளிடம் கேட்டறிந்து இருப்பதாகவும், இவற்றை நீதிமன்றத்தில் தெரிவிக்க இருப்பதாகவும் கூறினார்.

சிறை காவலர்கள் தாக்குதலில் கைதிகளுக்கு கை, கால்கள் , தொடை, முதுகை பகுதிகளில் கடுமையாக பாதிப்பு இருப்பதாகவும், கோவை மத்திய சிறை வார்டன்கள்

சிவகுமார், கணேஷ், ராகுல் , சடையன், மோகன்ராஜ், கிருபாகரன் ஆகியோர் கைதிகளை கடுமையாக தாக்கியுள்ளதாகவும், வேறு எந்த சிறை வளாகத்தில் இல்லாத வகையில் சிறையில் மனித உரிமை மீறல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறையில் தனியாக வார்டன் குழுவை வைத்து சிறை எஸ்.பி., செந்தில்குமார் தொடர்ந்து கைதிகளை கொடுமைப்பபடுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார். சிறை என்பது சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு கொடுமைப்படுத்த கூடிய சாடிஸ்ட்டாக ஆக சிறைகாவலர்கள் இருக்கிறார்கள் எனவும், காவல்துறையை விட சிறை காவலர்கள் கொடுமையாக நடந்து கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

கோவை சிறையில் கைதிகள் மிக கொடூரமாக தாக்கப்பட்டு, பிளேடால் அறுக்கப்பட்டது என்பது தங்களையே பதைக்க பதைக்க வைக்கிறது எனவும், விசாரணை கைதிகளுக்கே இந்த நிலைமை எனவும் தெரிவித்தார். சிறையில் 7 பேர் தாக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் புகார் தெரிவித்ததால், அந்த கைதிகள் 7 பேர் மீது மீண்டும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர், தாக்குதல் நடத்திய வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அதுவரை சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...