ஊராட்சியில் ரூ.30 லட்சம் மோசடி - தொட்டம்பட்டி கிராம சபை கூட்டத்தில் பாமகவினர் வாக்குவாதம்

கடந்த 2019-20ஆம் ஆண்டு நிதியாண்டில் 30 லட்சம் மதிப்பில் மெகா மோசடி நடந்துள்ளதாக கூறி, பாமக குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், தொட்டம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


திருப்பூர்: தொட்டம்பட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் தொட்டம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது கடந்த 2019- 20ஆம் ஆண்டு நிதியாண்டில் 30 லட்சம் மதிப்பில் மெகா மோசடி நடந்துள்ளது. இதை பாமக குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறிந்து இன்றைய கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



அப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் நாங்கள் தலைவராக இருக்கும் காலத்தில் தவறு நடைப்பெற வில்லை என தெரிவித்தனர். மேலும் தொட்டம்பட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இனிவரும் காலங்களில் மோசடிகள் நடைபெற்றால் பாமக சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். குடிமங்கலம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார் பொதுக் குழு உறுப்பினர் சுவாமிநாதன், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை செயலாளர் மகேந்திரவர்மன், கொள்கை பரப்பு செயலாளர் முருகவேல் கனகராஜ் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...