உடுமலையில் அறிவியல் மற்றும் புதுமை படைத்தல் கண்காட்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தனியார் சங்கங்கள் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் புதுமை படைத்தல் கண்காட்சி நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் புதுமை படைத்தல் கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், தனியார் சங்கங்கள் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் புதுமை படைத்தல் கண்காட்சி உடுமலை பழனி ரோட்டில் உள்ள ரோட்டரி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.



உடுமலை, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரகை தந்த 1-ம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல் மற்றும் புதுமை படைப்புகள், அறிவியல் சார் சிந்தனைகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

இதில் தண்ணீரை பாதுகாத்தல், நியூரானின் பாகங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு, ஆறு குளம் ஏரிகளில் உள்ள குப்பைகளை எளிதில் தூர் வாருவதன் மூலமாக தண்ணீர் சேகரிப்பை அதிகப்படுத்துதல், தானாகவே இயங்கும் நகரும் நாற்காலி, காற்று மூலம் மின்சாரத்தை தயாரித்தல், படிக்கட்டுகளில் நடந்து செல்வதை வைத்து மின்சாரம் தயாரித்தல், உடல்நிலை சரியில்லாதவர்கள் கண் திறந்த 10 வினாடிகளுக்குள் பிரத்தியேக கண்ணாடி அணியும் போது தானாகவே அவர்களின் பாதுகாவலருக்கு தொலைபேசி மூலம் இணைப்பு செல்லுதல், பார்வையற்றோர் தனக்கு எவ்வளவு தூரத்தில் பொருட்கள் உள்ளது என்பதை சென்சார் மூலம் அறியும் கருவி, தானியங்கி ரயில்வே கேட் போன்றவை இடம் பெற்றிருந்தது.

அதன்பின்பு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வருகை தந்திருந்த விஞ்ஞானி சீனிவாசன் பள்ளி குழந்தைகளோடு கலந்துரையாடினார். அப்போது விண்வெளி துறையின் வளர்ச்சி பற்றியும், எதிர்கால இந்தியாவில் நீங்களும் உங்களது பங்களிப்பினை செலுத்த வேண்டும் என்றும் மாணவர்களிடம் பேசினார்.



அதைத் தொடர்ந்து கண்காட்சியில் சிறப்பான படைப்புகளை வைத்திருந்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



ஒவ்வொரு நிலையிலும் புதுமை படைத்தல் என்ற தலைப்பின் கீழ் புதிய கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தி இருந்த மாணவர்களுக்கு புதுமை படைப்பாளி சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன.



கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், கலிலியோ அறிவியல் கழக ஆசிரியர்கள் ரவிக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...