வால்பாறை பகுதியில் 20 இடங்களில் குளிக்க தடை - கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: வால்பாறை பகுதியில் 20 நீர் பிடிப்பு பகுதிகளுக்குள் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவு.

வால்பாறையில் தடை செய்யப்பட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி குளிப்பதால் அடிக்கடி உயிர்பலி ஏற்படுகிறது கடந்த 20 ஆம் தேதி கோவை தனியார் கல்லூரி படித்து வந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் நேற்று காடம்பாறை செல்லும் வழியில் அப்பர் ஆழியார் அணையில் குளித்த கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரதீப்பால்சாமி உயிரிழந்தார், இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் காந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி பலியாவதை தடுப்பதற்கு கீழ்க்கண்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருமலை இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி, சிறு குன்றா கூலாங்கள் ஆறு, சோலையார் ஆர்ச், ஸ்டேன்மோர் ஆறு, கெஜமுடி கூடுதுறை,சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தலநார் நீர் வீழ்ச்சி, காடம்பாறை அணை, அப்பர் ஆழியார் அணை, காடம்பாறை 501 டனால், சோலையார் டேம், சின்னக்கல்லார், நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டர் பால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு, அனலின் நீர்வீழ்ச்சி, மானாம்பள்ளி தங்கவேல் ஆறு உள்ளிட்ட 20 இடங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...