கத்தி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் அரசியல் - தமிழிசை வேதனை

இளைஞர்களுக்கு படிக்கும் போதே அரசியல் தேவை என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கோவையில் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.


கோவை: ஆண்களை விட அதிக அரசியலை செய்த காரணத்தினால் இன்று ஆளுநராக உயர்ந்திருப்பதாக தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு.

கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கல்லூரி மாணவர்களிடையே அரை மணி நேரம் அரசியலைப் பற்றி உரையாற்றினார்.



அப்போது பேசிய அவர், கடுமையான பணி சூழ்நிலையிலும் ஏன் இங்கு வந்தேன் என்றால் பாலிடிக்ஸ் என்பது எனக்கு பிடிக்கும், இந்த இடத்தில் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் தலைப்பே அரசியலை பற்றிதான். பொலிடிக்கல் அறிவியல் என்பது நாட்டிற்கு உபயோகமான ஒரு ஒரு சப்ஜெக்ட். அரசியல் இல்லாத இடமே கிடையாது.

இளைஞர்களுக்கு படிக்கும்போது அரசியல் தேவை என்பதுதான் எனது அழுத்தமான கருத்து. இது யாரு என்ன சொன்னாலும் மறுக்க முடியாது நேர்மறையான அரசியல் தேவை. தற்போது அரசியல் கட்சிகளுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எதிர்மறையான கருத்துக்களை சொல்ல வேண்டியதென்றால் மாணவர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் போராட்டம் நடத்தி மாணவர்களை பகடிக்காயாக பயன்படுத்துவதை நான் எதிர்க்கிறேன். ஆனால் அவர்கள் தலைவராக வருவதை நான் வரவேற்கிறேன்.

பிரதமர் உலகத்தில் எங்கே போனாலும் தமிழ் மொழியை சொல்லிவிட்டு தான் அவர் பெருமையை பேசுகிறார் அவர் தமிழுக்கு பங்கம் விளைப்பாரா? இந்தியாவில் திருக்குறளை பிரதமர் மேற்கோள் காட்டியுள்ளார். தமிழ் மொழியை அவர் கையாண்டதற்கு நாம் யாரும் அவரை பாராட்டவில்லை. பெரும்புள்ளிகளாக மாணவர்களும் வரவேண்டும். கட்டு கட்டாக வைத்திருப்பவர்களுக்கு தான் அரசியல் என்பதும், மற்றவர்களுக்கு அரசியல் இல்லை என்ற ஒரு எண்ணம் வந்து கொண்டிருக்கிறது.

அதே போல கத்தி கத்தி பேசுபவர்களுக்கு அரசியல் இல்லை, கத்தி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் அரசியல் என்ற சூழ்நிலை வந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாமல் சிறப்பான ஒரு சூழ்நிலையை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும் என்பது அல்ல, அரசியல் சார்ந்த கருத்துக்களை எழுதலாம், தூய்மையான அரசியல்வாதிகளுக்கு உதவலாம்.

பெண்களுக்கு 33 சதவீதம், சட்டமன்றத்தையும் பாராளுமன்றத்தையும் அலங்கரிப்பவர்கள் இவர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் அதனால் தான் பெண்களுக்கு அரசியல் வேண்டும். ஆண்களை விட அதிகமாக அரசியல் செய்ததால் ஆளுநராக நிற்கிறேன். அரசியல் வாரிசாக இருந்தால் உங்களை காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும், நீங்களே நேரடியாக கட்சி அல்லது ஒரு சமுதாய அமைப்புக்கு வந்தால் பல சவால்களை சந்திக்க வேண்டியது வரும். அந்த துணிச்சலையை மட்டும் விட்டு விடக்கூடாது என தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...