உலக பார்வை தினம் - கோவையில் ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம் சார்பில் வாக்கத்தான் நடைபயணம்

உலக பார்வை தினத்தை முன்னிட்டு ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம் சார்பில் கோவையில் பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள் என்ற தலைப்பில் வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது.


கோவை: உலக பார்வை தினத்தைமுன்னிட்டு நடைபெற்ற வாக்கத்தான் நடைபயணத்தில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உலக பார்வை தினம் (WSD) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக "பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள்" என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, "ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம்" சார்பில் கோவையில் "பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள்" என்ற தலைப்பில் வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மற்றும் லோட்டஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மதுசுதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ரேஸ்கோர்ஸ் பகுதியில் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது.



பணியிடத்தில் பார்வையைப் பாதுகாப்பது, ஆரோக்கியமான கண்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த வாக்கத்தான் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் ஆப்டோமெட்ரிக் அமைப்பின் நிர்வாகிகள், குமரன், ப்ரீதா ராம்பிரசாத், சாமுவேல் விஜய், அருள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...