வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்12ம் வகுப்பு முடித்ததும் என்ன படிக்கலாம் என்ற தலைப்பில் வழிக்காட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: என்ன படிக்கலாம் என்ற வழிக்காட்டுதல் நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

கோவை, துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், பள்ளி மாணவருக்கான உயர் கல்வி பயிலுதல் பற்றிய வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு அனைவரையும் வரவேற்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலின் ஐடியா லேப் மற்றும் இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் உயர் கல்வி பயிலுதல் பற்றிய வழிகாட்டி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எதிர்கால தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல் நிபுணர் மற்றும் ஆய்வாளர் அஸ்வின் கலந்து கொண்டார்.



அவர் பேசும் போது, உயர்கல்வியின் மகத்துவத்தையும், பெண்கல்வியின் மகத்துவத்தையும் எடுத்துரைத்தார். மாணவ, மாணவியர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் தங்களின் எதிர்கால கல்வி குறித்து எவ்வாறு திட்டமிடல் வேண்டும் எனவும், என்.ஐ.டி ஐ.ஐ,எஸ்.சி, ஐ.ஐ.டி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு எவ்வாறு மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என விளக்கக்காட்சி மூலம் விரிவாக எடுத்து கூறினார்.

படிப்பதற்கு மனம் ஆசை பட வேண்டும் என்பதனையும் அதற்கு பணம் ஒரு பொருட்டல்ல என்பதை மனதில் கொண்டு அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் எவ்வாறு இக்காலகட்டத்தில் சாதிக்கின்றனர் என்பதனையும் புள்ளிவிவரத்துடன் விளக்கியது மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. சுமார் 1500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், கல்லூரியின், விளையாட்டுத்துறை, ஆங்கில இலக்கிய சமூகம், தமிழ் மன்றம், ஐடியா லேப், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், ஏரோ மாடலிங் என பல்வேறு குழுக்கள் நடத்திய செயல்பாடு அடிப்படையிலான கற்றல் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

சிறப்பாக திறமைகளையும் வெளிப்படுத்திய மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவை, கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் செந்தமிழ் செல்வி, நாட்டு நலப்பணி திட்ட தலைவர் கேசவசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...