மனநலத்தை மேம்படுத்த இயற்கையுடன்‌ தொடர்பில்‌ இருங்கள்‌ - உலக மனநல தினத்தை முன்னிட்டு சத்குரு அறிவுரை

உலக மனநல தினத்தையொட்டி, பல்வேறு விதமான மனநல பாதிப்புகளிலிருந்து விடுபடவும்‌, ஆரோக்கியமாக வாழவும்‌ இயற்கையுடன்‌ தொடர்பிலிருப்பது என சத்குரு கூறியுள்ளார்‌.


கோவை: மனநோய்களால்‌ அவதிப்படும்‌ குழந்தைகளை விளையாட்டிலும்‌ இசையிலும்‌ ஈடுபடுத்த வேண்டும்‌ என்று சத்குரு அறிவுரை வழங்கியுள்ளார்.

உலக மனநல தினம்‌ இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில்‌, பல்வேறு விதமான மனநல பாதிப்புகளிலிருந்து விடுபடவும்‌, ஆரோக்கியமாக வாழவும்‌ இயற்கையுடன்‌ தொடர்பிலிருப்பது என சத்குரு கூறியுள்ளார்‌. எளிய முறையில்‌ மனநலனை மேம்படுத்தி கொள்வதற்கு சத்குரு அவர்கள்‌ சில ஆலோசனைகளையும்‌ வழங்கியுள்ளார்‌.

இது தொடர்பாக அவர்‌ கூறுகையில்‌ "இன்றைய உலகில்‌ செயலுக்கும்‌ புத்திக்கும்‌ ஒதுக்கப்பட்டுள்ள சக்தி பெரும்பாலும்‌ பயன்படுத்தப்படாமல்‌ போவதால்‌, எல்லாவிதமான மன நோய்களும்‌ மனச்சோர்வும்‌ ஏற்படுகிறது. எனென்றால்‌ உணர்ச்சியளவில்‌ போதுமான அளவு தங்களை வெளிப்படுத்தாமலும்‌ உடலை வருத்தாமலும்‌ இருந்தால்‌ மனச்சோர்வில்‌ ஆழ்வது இயல்பானது. எனவே, மனநோய்களால்‌ அவதிப்படும்‌ குழந்தைகளை விளையாட்டிலும்‌ இசையிலும்‌ ஈடுபடுத்த வேண்டும்‌.

கணினி, மொபைல்‌ உள்ளிட்ட சாதனங்களால்‌ ஏற்படக்கூடிய எந்திரத்தனமான வாழ்கையில்‌ இருந்து விடுபட்டு இயற்கையுடன்‌ தொடர்பில்‌ இருக்கும்‌ பழக்கத்தை அதிகரித்துக்‌ கொள்ளுங்கள்‌. குறிப்பாக நீர்‌, ஒளி, மண்‌ ஆகியவற்றுடன்‌ தொடர்பில்‌ இருப்பதன்‌ மூலம்‌ உங்களுடைய மனம்‌ மற்றும்‌ உடல்‌ ஆரோக்கியத்தை சுலபமாக மேம்படுத்த முடியும்‌.

நீங்கள்‌ செய்யும்‌ தொழிலுக்கு ஏற்ப உங்கள்‌ உணவு முறையை மாற்றி அமைத்துக்‌ கொள்ளுங்கள்‌. மன ஆற்றலையும்‌ சமநிலையையும்‌ மேம்படுத்தும்‌ உணவை அதிகம்‌ எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. உதாரணத்திற்கு, காபி குடிப்பதை குறைத்துக்‌ கொண்டு வெள்ளை பூசணி ஜூஸ்‌, தேன்‌ போன்ற நேர்மறை பிராண சக்தி கொண்ட உணவை அதிகம்‌ எடுத்து கொள்ளுங்கள்‌. பெருங்குடலை சுத்தமாக வைத்திருக்கும்‌ வழிமுறையை பின்பற்றுங்கள்‌" என சத்குரு கூறியுள்ளார்‌.

மேலும்‌, இது தொடர்பாக “X" தளத்தில்‌ அவர்‌ வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்‌ “நீங்கள்‌ உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுர் தியாக மற்றும்‌ ஆற்றல்‌ ரீதியாக சமநிலையுடன்‌ இருந்தால்‌ உங்கள்‌ உட்சபட்ச திறனுடன்‌ உங்கள்‌ வாழ்கையை நடத்துவீர்கள்‌.

சமநிலை தான்‌ மிக முக்கிய அம்சம்‌. சமநிலையற்ற தன்மை என்பது மோசமான ஆரோக்கியத்தை குறிக்கும்‌. சமநிலை என்பது தான்‌ ஆரோக்கியம்‌. உடல்ரீதியாக, மன ரீ தியாக மற்றும்‌ உணர்வு ரீதியாக நீங்கள்‌ ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும்‌ என்றால்‌, சமநிலை அவசியம்‌.” என கூறியுள்ளார்‌.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...