ராயல்டி என்கின்ற பெயரில் அடியாட்களை கொண்டு பண வசூல் - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ராயல்டி என்கின்ற பெயரில் அடியாட்களை கொண்டு பண வசூலிப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எர்த்மூவர் உரிமையாளர் நல சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: ராயல்டி என்கின்ற பெயரில் பணம் வசூலிக்கும் முறையை நீக்கி மண் எடுப்பதற்கு உரிம சீட்டு வழங்கும் நடைமுறையை எளிமையாக்கி உரிய அனுமதி வழங்க வேண்டும் என எர்த்மூவர் உரிமையாளர் நல சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.



எஸ்.ஆர்.குரூப்ஸ் என்ற நிறுவனம் சட்டவிரோதமாக ராயல்டி தொகை வசூல் செய்வதாகவும், அதுல மண் எடுப்பதற்கான உரிம சீட்டு வழங்கும் நடைமுறையை எளிமையாக்கவும் வலியுறுத்தி கோவை மாவட்ட எர்த் மூவர் உரிமையாளர் நலச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் இருந்து எர்த் ஒர்க் செய்த மண்ணை வெளியில் எடுத்து செல்வதற்கும், பிறகு திரும்ப ரீபில்லிங் செய்வதற்கும் ராயல்டி தொகை இரண்டு முறை எந்த ரசீதும் இல்லாமல் எஸ் ஆர் குரூப்பை சேர்ந்த செல்வம், மாரியப்பன், பாலமுருகன் என்பவர்கள் அடியாட்கள் மூலம் தங்களது லாரிகளை தடுத்து நிறுத்தி ராயல்டி என்கின்ற பெயரில் பணம் வசூலிப்பதாகவும், பணத்தை தரவில்லை என்றால் லாரியை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தினம்தோறும் பல லட்சம் ரூபாயை அவர்கள் வசூல் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் ஏற்கனவே புதிய வாகன விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, சுங்க கட்டண விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு போன்றவை இருக்கின்ற நிலையில் இவர்களது நடவடிக்கைகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் எனவே ராயல்டி என்கின்ற பெயரில் பணம் வசூலிக்கும் முறையை நீக்கி மண் எடுப்பதற்கு உரிம சீட்டு வழங்கும் நடைமுறையை எளிமையாக்கி உரிய அனுமதி வழங்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனுவின் நகலை முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலகம் ஆகியவற்றுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...