கோவை மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பங்கேற்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் முன்னிலையில், மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: வளர்ச்சித்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும் என்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் முன்னிலையில், மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் மாவட்ட ஊராட்சி செயலர் பாஸ்கர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் நகராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காகவும்,மாவட்டம் முழுவதற்கும் ஒட்டு மொத்தமாக வரைவு வளர்ச்சித் திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காகவும், மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் பணியானது மாவட்டத்திற்கான வளர்ச்சி உத்திகள், திட்டங்கள் செயல் திட்டங்கள் உருவாக்குதல் ஆகிய பணிகளை மாவட்ட திட்டக்குழு மேற்கொள்ளும். இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன், தற்போது இரண்டாவது கூட்டம் நடைபெறுகின்றது. திட்டக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையினை ஏற்று இன்றையதினம் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கொடுத்த கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளது.

கோரிக்கைகளின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரத்தை மாவட்ட திட்டக்குழுவிற்கு தெரிவிக்கவேண்டும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாவட்ட திட்டக்குழுவில் புதிய வளர்ச்சித் திட்டம் ஒன்றை தயார் செய்வதற்கு விவாதித்து, பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கும்போது தேவையான திட்டத்திற்கான கருத்துகள் பரிந்துரைகள் செய்யப்படும். இதன் மூலம் சிறந்த திட்டத்தை தயாரிக்க உதவியாக இருக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக, அடுத்த கூட்டத்தில் அக்கோரிக்கைகளின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவிக்கவேண்டும். இதனால் வளர்ச்சித்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும். இதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...