துடியலூரில் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் உற்சாக வழிபாடு!

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ராஜ விநாயகர், நரசிம்மவிநாயகர், நந்தி விநாயகர், இரட்டை விநாயகர், குதிரை வண்டி விநாயகர், மயில் விநாயகர், வெள்ளைமாளிகை விநாயகர், சிங்க விநாயகர் என விதவிதமான விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



கோவை: துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் சுற்றுப் பகுதிகளில் இந்து முன்னணி, விஷ்வ ஹந்து பரிசத், அகில பாரத இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்புகள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் பொதுமக்கள் பொதுஇடங்கள் மற்றும் சொந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.



இதில் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே பாஜக சார்பில் மாநில மகளிர் அணி துணைத்தலைவர் வத்சலா தலைமையில் வெள்ளி கருட விநாயகர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.



தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இதேபோல, துடியலூர் அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் பிரிவு, வடமதுரை, உருமாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ராஜ விநாயகர், நரசிம்மவிநாயகர், நந்தி விநாயகர், இரட்டை விநாயகர், குதிரை வண்டி விநாயகர், மயில் விநாயகர், வெள்ளைமாளிகை விநாயகர், சிங்க விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநயாகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து கோபூஜை, அஸ்வபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேலும் வரும் அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து வரும் புதன் கிழமையன்று இந்த விநாயகர்கள் வெள்ளகிணர் குளத்தில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகளுக்கு இரவு பகலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...