சூலூர் மீனாட்சி அம்மன் கோவிலில் சௌந்தர்யா குழந்தைக்கு முடிக்காணிக்கை - நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

கோவை சூலூரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் ஆண் குழந்தைக்கு முடிக்காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகன் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.



கோவை: நட்சத்திர விடுதியில் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் ஆண் குழந்தைக்கு முடிக்காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் கோவை சூலூரை சேர்ந்த தொழிலதிபர் வணங்காமுடி என்பவரது மகன் விசாகனை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் சூட்டப்பட்டது.

இந்தநிலையில் சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் குலதெய்வ கோவிலான சூலூரில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் இன்று குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோயில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்தினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகனின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கோவை புறநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்படுகிறது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்காக விசாகன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் தங்களது குழந்தையுடன் கடந்த இரண்டு நாட்களாக கோவையில் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...