காவல்துறையினர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளரும் பிரபல திரைப்பட இயக்குனருமான ஆர்.வி. உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



கோவை: ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறிய திமுக தற்போது 27 மாதங்களுக்குப் பிறகு அதனை வழங்குவதால் ஒவ்வொரு மகளிரின் வங்கி கணக்கிலும் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக தலைமை கழக பேச்சாளரும் பிரபல திரைப்பட இயக்குனருமான ஆர். வி . உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,



அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவைக்கு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் எந்த ஒரு மக்கள் நல திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்தியிருந்தால் 2கோடியே 30 லட்சம் மகளிருக்கு இந்த நிதி வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் பல்வேறு விதிமுறைகளை விதித்து தற்போது ஒரு கோடி பேருக்கு மட்டுமே வழங்கியுள்ளனர். ஆட்சிக்கு வந்த உடன் தருவதாக கூறிய முதலமைச்சர் ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகிய பிறகு இத்திட்டத்தை கொண்டு வந்ததால் ஒவ்வொருவருக்கும் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

கோவை குனியமுத்தூர் காவல் சரக உதவி ஆணையர் ரகுபதிராஜா திமுக நிர்வாகியை போல் செயல்படுகிறார். அவர் காக்கி சீருடையை கலைந்து கரை வேட்டி கட்டி கொள்ளட்டும். வெட்கமில்லாமல் திமுக விற்கு அடிபணிந்து கிடக்கிறார். அதிமுக கொடி கட்ட அனுமதிக்காத அவர் திமுக அமைச்சர் வந்தபோது கொடி தோரணம் பிளக்ஸ் பேனர் போன்றவற்றிற்கு அனுமதியளித்தார்.

கோவையில் தான் அதிக செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. காவல்துறைக்கு அதிமுக தான் பாதுகாப்பு அளித்த்து. விரைவில் ஆட்சி மாறும் அப்போது காட்சியும் மாறும் என்பதால் காவல்துறை நடுநிலையாக செயல்பட வேண்டும்.

போகிற போக்கை பார்த்தால் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்துவிடும் என தோன்றுகிறது. எப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் என்று எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...