உயர் மின் கோபுரங்களால் விவசாய நிலங்கள் பாதிப்பு..!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்கம் புகார்.!

உயர் மின் கோபுரம் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.


கோவை: உயர் மின் கோபுரங்கள் மற்றும் மின்னழுத்த கம்பிகளால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.



மதிப்பிழந்துள்ளது- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். உயர் மின்கோபுரங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகளால் விவசாய நிலங்கள் மதிப்பிலிருந்து காணப்படுகிறது எனவும் அதற்கா உரிய இழப்பீட்டை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் பகுதியில் நவமலை முதல் உடுமலை வரை விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மதிப்பிலிருந்து காணப்படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.



எனவே அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் தொடர்ந்து சேதமடைவதாகவும் தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...