பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்..!! தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.!

தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, சாலை பராமரிப்பு ஊழியர் சங்கம் சார்பில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரி முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். கூடுதலாக 10% ஆபத்துபடி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள 8000 சாலை பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கேட்டுகொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அப்போது கடந்து 2002-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பத்தாயிரம் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அவர்களை பணி நியமனம் செய்யப்பட்டது.



இதில் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பணி ஆபத்து பணி என்பதால் அவர்களுக்கு கூடுதலாக 10% ஆபத்துபடி உயர்வு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் காலியாக உள்ள 8000 சாலை பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...