உதயநிதி ஸ்டாலினை கைது செய்யக் கோரி துடியலூரில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - 130 பேர் கைது!

சனாதனத்திற்கு எதிராக பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி, கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: அமைச்சர் உதயநிதியை கைது செய்ய வலியுறுத்தி கோவை துடியலூரில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்து தர்மத்தையும், சனாதனத்தையும் இழிவுப்படுத்தி பேசியதாக கூறி இந்து அமைப்புகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட கோட்ட பொறுப்பாளர் உருவை பாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சனாதனத்திற்கு ஆதரவாகவும், உதநிதியை கைது செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.



இதில், நிர்வாகிகள் படையப்பா, முருகன், தம்பி சரவணன், இந்து வியாபாரிகள் சங்கம் மாவட்ட தலைவர் முருகானந்தம், ஜீவானந்தம், அசோக், திவாகர், ரஞ்சத், ஸ்ரீனிவாசன் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.



கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால் காவல்துறை துணை கமிஷனர் சண்முகம் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 130 இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...