கோவையில் 12ம் மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி..!! 17 மாநகராட்சிகளில் இருந்து 1,671 பேர் பங்கேற்பு.!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆர்‌.எஸ்‌.புரம்‌ கலையரங்கத்தில்‌ 17 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளைச்‌ சோந்த 1,671 மாணவ, மாணவியா்கள்‌ பங்கேற்ற 12ம்‌ வகுப்பு மாணவ, மாணவியார்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி (Career Guidance) நடைபெற்றது.


கோவை: மாணவ செல்வங்கள்‌ அரசின்‌ பல்வேறு திட்டங்களையும்‌ ஊக்கத்தொகைகளையும்‌ நல்ல முறையில்‌ பயன்படுத்தி கடினமாக உழைத்து மாணவர்களின்‌ பெற்றோர்க்கும்‌, பள்ளிக்கும்‌, நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்‌” என 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில் அறிவுரை வழங்கப்பட்டது.



கோயம்புத்தார்‌ மாநகராட்சிக்குட்பட்ட 17 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்‌ பயிலும்‌ 12-ம்‌ வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழிகாட்டி நிகழ்ச்சி (Career Guidance) ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி கலையரங்கத்தில்‌ மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ ஏற்பாட்டின்பேரில்‌ காலை 10.00 மணி முதல்‌ 1.00 மணி வரையிலும்‌, பிற்பகல்‌ 2.30 முதல்‌ மாலை 5.00 மணி வரையிலும் இரண்டு அமார்வுகளாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்‌ 1671 மாணவ, மாணவிகள்‌ பங்கேற்றார்கள்‌.



இந்நிகழ்ச்சியில்‌ சென்னை IIT மெட்ராஸ்‌ திட்ட தலைவர்‌ (வழிகாட்டி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்‌) என்‌.ஹரிகிருஷ்ணன்‌ கலந்து கொண்டு பேசியதாவது, “மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்கள்‌ தன்நம்பிக்கை விடாமுயா்ச்சியுடன்‌ படிக்க வேண்டும்‌. அப்படி படித்தால்‌ நிச்சயம்‌ எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க முடியும்‌. நல்ல வாய்ப்புகள்‌ கிடைக்கும்போது மாணவா்கள்‌ அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்‌. அனைத்து கல்வி பிரிவுக்கும்‌ மதிப்பு உண்டு. சரியான கல்வியை சரியான நேரத்தில்‌ படிக்க வேண்டும்‌. கல்வி கற்பது மிகவும்‌ எளிதானது. மாணவர்கள்‌ புரிந்து படிக்க வேண்டும்‌.

IIT மெட்ராஸ்‌ 12ம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்துகிறது. ஆன்லைனில்‌ வீடியோ வடிவில்‌ கேள்விகள்‌ வெளியிடப்படும்‌. IIT மெட்ராஸ்‌ படிப்பதற்காக அக்டோபர் இறுதியில்‌ நுழைவுத்தோவு நடைபெறும்‌. இந்த நுழைவுத்தோவில்‌ சரியான பதில்‌ எழுதி தோச்சி பெற்ற பின்னர், நவம்பரில்‌ தேர்ச்சிக்கான ஆணையம்‌ வழங்கப்படும்‌. அதிகபட்சமாக மாதம்‌ 1 இலட்சம்‌ முதல்‌ குறைந்தபட்சம்‌ ஆண்டற்கு 1 கோடி வரையில்‌ ஊதியம்‌ கிடைக்க வாய்ப்புள்ளது. இறுதி ஆண்டு படிக்கும்‌ போது வேலை வாய்ப்புகள்‌ கிடைக்கும்‌.

எனவே, மாணவ செல்வங்கள்‌ அரசின்‌ பல்வேறு திட்டங்களையும்‌ ஊக்கத்தொகைகளையும்‌ நல்ல முறையில்‌ பயன்படுத்தி கடினமாக உழைத்து மாணவர்களின்‌ பெற்றோர்க்கும்‌, பள்ளிக்கும்‌, நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்‌” என தெரிவித்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி கல்வி அலுவலா்‌ முருகேசன்‌‌, ஆசிரியர்கள்‌, மாணவ, மாணவிகள்‌ பங்கேற்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...