பள்ளிக்கூடம் 2.0வில் பள்ளி மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் தற்காப்புக்கலை பயிற்சி!

கோவை மாவட்ட காவல்துறை சார்பில், ‘பள்ளிக்கூடம் 2.0’ என்ற திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று ஆலாந்துறை காவல் நிலைய பகுதியில் மாணவிகளுக்கு 4 நாள் தற்காப்பு கலை பயிற்சிகள் தொடங்கி உள்ளது.


கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில்ஆலாந்துறை காவல் நிலைய பகுதியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளது.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ என்ற திட்டத்தின் மூலம் சுமார் 1,300 பள்ளிகளில் சுமார் 2,11,000 மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் மூலம் பாலியல் குற்றங்கள் சம்மந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இது பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் ‘பள்ளிக்கூடம் 2.0’ என்ற மேம்படுத்தப்பட்ட திட்டத்தினை தொடங்கி இதன் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வு மற்றும் அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் யுக்திகளை அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் இன்று (30.08.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் ஆலாந்துறை காவல் நிலைய பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் GI TOKU KAI KARATE SCHOOL SHINKEN SPORTS KARATE ACADEMY-யை சேர்ந்த தற்காப்புக்கலை பயின்ற பெண் பயிற்சியாளர்கள் மற்றும் கோவை மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த தற்காப்புக்கலை பயிற்சி பெற்ற நான்கு பெண் காவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், பள்ளி மாணவிகளுக்கு அவர்களிடம் யாரேனும் தவறாக நடந்து கொள்ள முற்பட்டால் அச்சம் கொள்ளாமல் அவர்களிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான தற்காப்பு முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன.



இப்பயிற்சி வகுப்பில் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ஆம் வகுப்புகள் படிக்கும் சுமார் 40 மாணவிகள் கலந்து கொண்டனர். இதுபோன்ற தற்காப்பு பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு பள்ளிகளிலும் நான்கு நாட்கள் நடைபெற உள்ளன.

மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அதனை யாரிடம் தெரிவிக்க வேண்டும், எவ்வாறு தெரிவிக்க வேண்டும், மற்றும் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார்.

இப்புதுமையான நிகழ்ச்சி பள்ளி மாணவிகளிடையே பெரிதும் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளதாக மாணவிகளும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...