தண்ணீர் லாரி மீது பஸ் மோதல் - கட்டிட தொழிலாளி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி

திருப்பூர் மாவட்டம் ருத்ராவதி அருகே திரும்ப முயன்ற தண்ணீர் லாரி மீது தனியார் பஸ் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் லாரி கவிழ்ந்த விபத்தில் அதில் அமர்ரிருந்த கட்டிட தொழிலாளி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


திருப்பூர்: தண்ணீர் லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடையிலிருந்து தண்ணீர் லாரி தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி தனியார் பஸ் வந்தது.



ருத்ராவதி அருகே வாய்க்கால் பாலம் பிரிவில் லாரி வலதுபுறம் திரும்ப முயன்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் லாரி ரோட்டில் கவிழ்ந்தது.



இந்த விபத்தில் லாரியின் முன்புற சீட்டில் உட்கார்ந்து வந்த பொங்கலூரைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ரவி (வயது30) தண்ணீர் லாரியின் அடியில் சிக்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

லாரியை ஓட்டி வந்த குண்டடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார் (29), அவர் அருகில் உட்கார்ந்து வந்த மேட்டுக்கடையை சேர்ந்த பிரபு (24) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து

குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...