கோவையில் அனல் பறக்க நடந்த கார், பைக் ரேஸ் - மெய்மறந்து பார்த்த பார்வையாளர்கள்

கோவையில் எஃப் எம் எஸ் சி ஐ எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் பிரபல நிறுவனமான ஜேகே டயர் நிறுவனத்தின் சார்பில் கார்,பைக் ரேஸ் நடைபெற்றது. இதில் அனல் பறக்க சென்ற வீர்ர், வீராங்கனைகளை சாலையில் இருபுறங்களிலும் நின்றிருந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



கோவை: கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டியில் தில்ஜித், திஜில் ராவ், ருகான் ஆல்வா மற்றும் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி, கோவையைச் சேர்ந்த யோகேஸ்வரன், பரோஸ் பட்டாரியா மற்றும் பெண் வீராங்கனையான மிரா எர்டா உள்ளிட்ட பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.



எஃப் எம் எஸ் சி ஐ எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் பிரபல நிறுவனமான ஜேகே டயர் நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் 26-வது ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு, அதன் முதல் சுற்று போட்டிகள் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் ஆரம்பமானது.



ஜேகே டயர் நோவிஸ் கோப்பைக்கா கார் பந்தயம், எல்ஜிபி ஃபார்முலா-4 கார் பந்தயம் மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்க்கான இருசக்கர வாகன பந்தயம் என மூன்று பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

10 சுற்று 15 சுற்று என வெவ்வேறு வகையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், தேசிய அளவில் சிறந்த கார்பந்தய வீரர்களான தில்ஜித், திஜில் ராவ், ருகான் ஆல்வா மற்றும் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி, கோவையைச் சேர்ந்த யோகேஸ்வரன், பரோஸ் பட்டாரியா மற்றும் பெண் வீராங்கனையான மிரா எர்டா உள்ளிட்ட பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 20 பேர் என பங்கேற்று போட்டிகள் நடத்தப்பட்ட சூழலில் வீரர்கள் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

முதல் சுற்று போட்டிகள் கோவையில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்த சுற்றுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளது.



அனல் பறக்க நடந்த இந்த ரேசில், சீறிப்பாய்ந்த கார், பைக் வாகனங்களை பார்வையாளர்கள் மெய்சிலிர்த்து பார்த்தது ரசித்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...