மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்பு தொழிற்கடன் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்பு தொழிற்கடன் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் 12 தொழில் முதலீட்டாளர்களிடமிருந்து 20 கோடி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டார்.


கோவை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்பு தொழிற்கடன் முகாம் நடைபெற்றது. இயந்திர மூலதனக்கடன், விரைவுக் கடன், மருத்துவர் திட்டம், Corporate கடன் திட்டம், கழகத்தின் முக்கிய வாடிக்கையாளர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மானியங்களும் வட்டியில் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றது, இந்த வாய்ப்பை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், புதிய தொழில் முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்பு தொழிற்கடன் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் 12 தொழில் முதலீட்டாளர்களிடமிருந்து 20 கோடி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டார்.

இம்முகாமில் தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மண்டல மேலாளர் பேபி, கோவை கிளை மேலாளர் கீதா, கொடிசியா தலைவர் திருஞானம், முன்னாள் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்/நிதி ஆலோசகர் வணங்காமுடி உட்பட பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர், இந்த கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது.

இக்கழகமானது தமிழ்நாடு அரசின் மானியத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் மானியத் திட்டங்களை துரிதமாக செயல்படுத்தி வருகின்றது. இக்கழகமானது தனது சிறப்பு தொழில் கடன் விழாவினை ஆகஸ்ட் 21- ம் தேதி தொடங்கி செப்டம்பர் 1-ம் தேதி வரை நடத்தி வரும் நிலையில், இதன் மூலமாக அனைத்து விதமான தொழில் கடன்களும் வழங்கப்படும்.

தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.1.50 கோடி வரை மானியம்) நிதி உதவி வழங்கப்படுகிறது. முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

அதுமட்டுமின்றி புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் (NEED) மூலம் 5 முதல் 10 சதவிகிதம் முதலீடு செய்யும் தொழில்களுக்கு 25 சதவிகிதம் மானியமாகவும், 70 சதவிகிதம் கடனுதவியும் வழங்கப்படுவதுடன் 3 சதவிகிதம் வட்டியில் தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது.

அதுபோலவே, அண்ணல் அம்பேத்கர் சேம்பியன்ஸ் திட்டம் (AABCS) மூலதனமின்றி வழங்கப்படும் 65சதவிகித கடனுதவியில் 35சதவிகிதம் மானியமும், தவிகிதம் வட்டியிலும் தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

இதுபோல் இயந்திர மூலதனக்கடன், விரைவுக் கடன், மருத்துவர் திட்டம், Corporate கடன் திட்டம், கழகத்தின் முக்கிய வாடிக்கையாளர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மானியங்களும் வட்டியில் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றது, இந்த வாய்ப்பை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், புதிய தொழில் முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...