திமுக அரசு கோவையை புறக்கணிக்கவில்லை - நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதி!

கோவையை திமுக அரசு புறக்கணிக்கவில்லை என தெரிவித்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவினாசி மேம்பால பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மெட்ரோ பணிகளும் வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிக்கவில்லை என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.



கோவை மதுக்கரை மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதி வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது.



இதற்கான துவக்க விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.



இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது,



தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்னர் கோவைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை மூலமாக 368 கிலோமீட்டர் சாலை தூரத்தை 770 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக 284 கோடி மதிப்பில் 14 பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவையில் சுற்றுவட்ட சாலை அறவிப்பை 2007 ல் கலைஞர் முதலமைச்சராக இருக்கும் போது வெளியிட்டார். 2009-ல் திட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றத்தால் இந்த திட்டம் தொய்வடைத்தது.

இங்குள்ள பெரும்பான்மையான தொழிலதிபர்களை அழைத்து கூட்டம் நடத்தியபோது, இந்த மேற்கு புறவழிச்சாலை பணியை முதன்மையாக செய்ய சொன்னார்கள். அதன் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கையின் பேரில் மேற்கு புறவழிச்சாலை பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கேரளாவில் இருந்து வரும் பெரும்பான்மையானவர்கள் மாநகருக்குள் வராமல் நீலகிரிக்கு செல்ல முடியும். இதமூலம் போக்குவரத்து நெரிசலை குறையும். இந்த புறவழிச்சாலை பணிகள் 3 கட்டமாக செய்ய இருக்கின்றோம்.

முதற்கட்டமாக மதுக்கரை-மாதம்பட்டி வரையிலான சாலை பணிக்கு முழுமையாக நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதால், 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று இருக்கும் போதே 2 ஆம் கட்ட பணிகளுக்கு 95% நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

மூன்றாம் கட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 24 மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்படும்.

இந்தியா குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக அறிக்கை கொடுத்து இருக்கின்றேன். சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்ட முடிவு எடுக்கப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த பகுதிகளில் மேம்பாலம் பணிகள் வேண்டும் என கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்ததால், இந்த சிங்காநல்லூர், சாய்பாபா காலனி பாலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றது. தவிர்க்க முடியாத காரணத்தினால், சாலை பணிகளுக்கு விவசாயம் நிலங்கள் ஒரு சில இடங்களில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

செம்மொழி மாநாடு கோவையில் தான் கலைஞர் நடத்தினார். கோவைக்கு பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தோம். அதை அதிமுக தான் கிடப்பில் போட்டார்கள். ஆனால் அதிமுக விட்டு சென்ற பாலப்பணிகளை முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகின்றோம். மேட்டுப்பாளையம் சக்தி சாலை 4 வழி சாலையாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.

கோவையை திமுக அரசு புறக்கணிக்கவில்லை. தொழில் நகரமான கோவைக்கு எந்தவித ஓர வஞ்சனையும் செய்யவில்லை. இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.

அவினாசி மேம்பாலம் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மெட்ரோ பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றது. எல்&டி சாலையில் அவர்களுடைய ஒப்பந்த காலம் முடிந்தவுடன் மாநில அரசு அந்த சாலையை கையைகப்படுத்தி 4 வழி சாலையாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...