பல்லடத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது கூலிப்படையினர் கொலைவெறி தாக்குதல் - பரபரப்பு!

பல்லடம் அருகே இளம்பெண் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இருவரையும் போலீசார் பிடித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 3 பெண்கள் உள்பட காதலனின் உறவினர்கள் 6 பேரை கூலிப்படையை வைத்து தாக்கிய சம்பவத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே காதலன் வீட்டாரை இளம்பெண்ணின் உறவினர்களை கூலிப்படையை வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கோவில்வழி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் சூர்யபிரகாஷிற்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் காலை முதல் பெண் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி கடைசியாக பல்லடத்தை அடுத்த அம்மாபாளையத்தில் சூர்யபிரகாஷ் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தேடியுள்ளனர்.

பின்னர் சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து பல்லடம் போலீசார் துரிதமாக செயல்பட்டு பெண்ணையும் சூர்யபிரகாஷையும் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சம்பவம் நடந்த இடம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டதால் பெண்ணை போலீஸ் பாதுகாப்புடன் நல்லூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காதலனும் அவரது உறவினர்களும் ஆம்னிவேனில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.



இதனிடையே ஆம்னி வேன் பல்லடத்தை அடுத்த அருள்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது பைக் மற்றும் 3 கார்களில் வந்த மர்ம நபர்கள், வழிமறித்து ஆண், பெண்கள் என்று பாராமல் கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.



பின்னர் வெறி அடங்காமல் காதலனுக்கு பதிலாக அவரது மாமா சதீஷ்குமாரை வேனில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற பல்லடம் போலீசார் தாக்குதலில் பலத்த காயமடைந்த மனோஜ்குமார், அருணாதேவி, கிருஷ்ணவேணி, துளசிமணி, ஜோதிமணி, மாசிலாமணி ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தாக்குதலில்.ஈடுபட்ட கள்ளிமேட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலை பெண் வீட்டாரின் ஏற்பாட்டில் கூலிப்படைக்கு ஏற்பாடு செய்து காதலன் மீது தாக்குதல் நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.



தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பிரபல அரசியல் கட்சியின் நிர்வாகியான அன்பு ரமேஷ், செல்வகுமார் உள்ளிட்ட 15 திற்கும் மேற்பட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே அன்பு ரமேஷ் மீது அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கூலிப்படை கலாச்சாரம் வேறூன்ற விடாமல் தடுத்து நிறுத்தி இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...