அவிநாசி சாலையில் பொருத்தப்பட்ட வேக அளவீட்டு கருவி மூலம் இதுவரை அபராதம் விதிக்கப்படவில்லை - மாநகர காவல் ஆணையர் தகவல்!

கோவை - அவிநாசி சாலையில் வைக்கப்பட்டுள்ள 40 கிலோமீட்டர் தானியங்கி வேக அளவீட்டு கருவியின் மூலமாக இதுவரை யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: அவிநாசி சாலையில் உள்ள தானியங்கி வேக அளவீட்டு கருவியின் மூலமாக இதுவரை அபராதம் விதிக்கப்படவில்லை என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,



கோவை அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யு டர்ன் வசதி செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது.

பாதசாரிகள் நின்று செல்ல 30 வினாடி அவகாசமும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல சுங்கம் பகுதியில் போக்குவரத்தை கண்காணிக்க o voilence 13 கேமராக்கள் பொருத்தி உள்ளோம்

அவிநாசி சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு ஈ சாலன் போடப்படும் என தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, அவிநாசி சாலையில் இளைஞர்கள் இரவு நேரங்களில் அதிகமான வேகத்தில் சென்று வருகிறார்கள்.

விபத்தை கட்டுப்படுத்தவே பொருத்தப்பட்டு உள்ளது, பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக பொருத்தப்படவில்லை இதுவரை யாருக்கும் சலான் அனுப்பவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு 413 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது 2023 ஆண்டு 369 விபத்துக்கள் நடைபெற்றது, அதேபோல 2022 ஆம் ஆண்டு 139 விபத்து இறப்புகள் நடை பெற்று உள்ளது. 2023ஆம் ஆண்டு 119 விபத்து இறப்புகள் நடைபெற்று உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...