பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் குப்பையில் தீயிட்டு எரிப்பு - அதிர்ச்சி!

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கும் மனுக்கள், உத்தரவுகள் சீல் வைக்கப்பட்டு, கையெழுத்திடப்பட்ட நிலையில், அலுவலகத்தின் பின்புறம் தீயிட்டு எரிக்கப்பட்டு கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் குப்பையில் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், 20 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய பல்லடம் தாலுக்கா வட்டாட்சியராக ஜெய்சிங் சிவக்குமார் என்பவர் உள்ளார். மேலும் பொதுமக்கள் அன்றாடம் அளிக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மனுதாரருக்குறிய தீர்வு காணப்படுவது வழக்கம்.



இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கும் மனுக்கள், உத்தரவுகள் சீல் வைக்கப்பட்டு, கையெழுத்திடப்பட்டவை அலுவலக பின்புறமாக குப்பையில் எரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



இந்நிலையில் துணை ஆட்சியர் சுதன் ஜெய் நாராயணன் தலைமையில் ஆய்வு கூட்டம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருந்தது.



இதனையடுத்து கூட்டம் முடிந்து வெளியே வந்த துணை ஆட்சியரிடம் குப்பையில் கிடந்த மனுக்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பின்னர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இச்சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...