கோவை ‘இதயங்கள்’ அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது - சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கினார்!

தமிழ்நாடு முழுவதும் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 1,200 ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் கோவையை சேர்ந்த இதயங்கள் அறக்கட்டளைக்கு சிறந்த மருத்துவ சேவையை பாராட்டி, சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது வழங்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது கோவையில் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையில் செயல்படும் 'இதயங்கள் அறக்கட்டளைக்கு' வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் 2023-ம் ஆண்டு சிறந்த மருத்துவ சேவைக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் ஜூலை 27ஆம் தேதி நடைபெற்றது.

தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவைக்காக கோவையில் செயல்படும் இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதனுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விருது வழங்கி பாராட்டினார்.

மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையின் கீழ் செயல்படும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1,200 ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு உயர்தர இன்சுலின், சர்க்கரை பார்க்கும் குளுக்கோமீட்டர் சாதனம், இன்சுலின் பம்ப், வலி குறைவான 4 எம்எம் ஊசி, குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல உதவிகள் கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது, கோவையில் தொடங்கிய இதயங்களின் பணி இன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பல அரசு மருத்துவமனைகள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்துடன் (தமிழ்நாடு பிரிவு) இணைந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட காரணமாக செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள விருது இதயங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கமான "தமிழகத்தில் முதல் வகை சர்க்கரை குறைபாடு கொண்ட ஒரு குழந்தை கூட தரமான மருத்துவமின்றி இன்னல் படக்கூடாது" என்ற உயர் எண்ணத்திற்கு ஒரு ஊன்று கோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முதல் வகை சர்க்கரை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களை சேர்ந்த 20 வயதுக்குட்பட்டவர்கள் உதவி பெற, இதயங்கள் அறக்கட்டளையை 9042858882 என்ற எண்ணிலும், இதயங்களின் வலைத்தளம் www.idhayangal.org -லும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...