கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு!

கோவையை சேர்ந்த பெண் ஒருவரிடம் நிலத்திற்காக ரூ.50 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரையம் செய்து தராததால், பணத்தை தந்த தரப்பினர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த பெண் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: நிலத்தகராறு சம்பந்தமாக இரு தரப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே சண்டையிட்டு கொண்டதால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ஒரு பெண்ணின் நிலத்தை ஒரு தரப்பினர் கேட்டதாக தெரிகிறது. அதற்கு 50 லட்சம் ரூபாய் விலை பேசிய நிலையில் நிலத்தை வாங்கும் தரப்பினர் 50 லட்சம் ரூபாய் பணத்தை அப்பெண்ணிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அப்பெண் நிலத்தை கிரையம் செய்து தராமல் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவானதாக பணத்தை கொடுத்த தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து பணத்தை இழந்த தரப்பினர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தனர்.

தற்போது அந்த சிவில் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது இடத்தில் அத்துமீறி சிலர் கட்டிடம் கட்டி வருவதாக புகார் மனு ஒன்றை அளிக்க வந்துள்ளார். இதனையறிந்த பணத்தை கொடுத்த நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்ணிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக அப்பெண் கூறிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.



அப்போது அப்பெண்ணின் தரப்பினர் காரில் புறப்பட முயன்ற நிலையில் பணத்தை கொடுத்த தரப்பினர் அவர்களை செல்ல விடாமல் தடுத்து கார் சாவியை பிடுங்கிக் கொண்டனர்.



மேலும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டனர்.



இதனிடையே அப்பெண் தங்களது சொத்தை அபகரிக்க முயல்வதாகவும் தங்களை தாக்குவதாகவும் கூறி தங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கதறினார். தங்களை தாக்க வந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் கூறினார். மேலும் தங்களை கொலை செய்ய பார்ப்பதாகவும் கூறி கதறி அழுதார்.

இதனிடையே 50 லட்சம் ரூபாய் வாங்கியதையும் அப்பெண் ஒப்புகொள்கிறார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு செல்வதால் நீதிமன்றம் வாயிலாக பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அப்பெண் கூறுகிறார்.



இவர்களின் இந்த சண்டையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோவை மாநகர பொருளாதர குற்றப்பிரிவு போலீசார் இருதரப்பினரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் அப்பெண் வந்த காரையும் காவல் துறையினர் எடுத்துச் சென்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...