சுந்தராபுரம் அருகே விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் - பரபரப்பு!

கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கோவை நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. விபத்தில் சிக்கிய நபர்கள் தப்பிச்சென்ற நிலையில், காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சுந்தராபுரம் அருகே விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில், பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த கார் ஒன்று, இன்று காலை 8 மணியளவில் சுந்தராபுரம் அருகே காந்திநகர் பகுதிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.



இதையடுத்து காரில் வந்த இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.



அப்போது அவ்வழியாக சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சுந்தராபுரம் போலீசார் காரை திறந்து பார்த்தபோது உள்ளே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து உள்ளே இருந்த குட்கா பொருட்களை வேறு ஒரு வாகனத்தின் ஏற்றி போலீசார் அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதை தொடர்ந்து பொக்லைன் மூலம் விபத்தில் சிக்கிய கார் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காரை ஓட்டி வந்த நபர்கள் யார்? எங்கிருந்து குட்கா கடத்திவரப்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...