கோவையில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை - வடமாநில தொழிலாளர்கள் பங்கேற்பு!

கோவை பூ மார்க்கெட் பகுதியில் திப்பு சுல்தான் தக்னி ஜமாத் பள்ளிவாசலில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகை நிகழ்வில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களுடன் வடமாநில தொழிலாளர்களும் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் அங்கு விற்பனை செய்யப்பட்ட தொப்பி, அத்தர் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.



கோவை: கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகையில், வட மாநில தொழிலாளர்களும் பங்கேற்று பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர். 



இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை இன்று பெரும்பான்மை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. 



பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.



சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட அவர்கள் புத்தாடை அணிந்து தொழுகை மேற்கொண்டனர். 



பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். 



அதன்படி பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் தக்னி ஜமாத் பள்ளிவாசலில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வடமாநில தொழிலாளர்களும் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். 



மேலும் இப்பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தொழுகை செய்பவர்களுக்கான தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. இதனை வடமாநில தொழிலாளர்கள் வாங்கிச் சென்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...