டாஸ்மாக்கில் கூடுதலாக ரூ.10 பெறுவது தொடர்வதை தடுத்து நிறுத்த வேண்டும் - எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்!

கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், டாஸ்மாக்கில் கூடுதலாக ரூ.10 பெறுவது தொடர்வதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.



கோவை: டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் தொடர்ந்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். 

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது, 



தமிழகத்தில் கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள் உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 ஆயிரம் கல்குவாரிகள், 3 ஆயிரம் கிரசர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

கோவையில் இருந்து 5 ஆயிரம் லோடு கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. இந்த வேலை நிறுத்தத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் குறித்து அரசின் கவனத்திற்கு வந்ததா என தெரியவில்லை. அரசு எதிலும் கவனம் செலுத்தவும் இல்லை. டாஸ்மாக் பிரச்சனையை விட இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது. 

அரசிற்கு கட்டும் தொகையை விட அதிகமாக லஞ்சம் வசூலித்து இந்த துறையை முடக்கி விட்டனர். எம் சாண்ட் குவாரிகளை முடக்கி மீண்டும் மணல் குவாரிகள் அமைக்கும் வாய்ப்பை இந்த அரசை உருவாக்கி உள்ளது. 

கேரளாவில் இருந்து ஒரு லோடு மணல் கூட எடுத்து வர முடியாது. தமிழகத்தில் இருந்து கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநர் தலையிட்டு கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்துபவர்கள் மற்றும் பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதிமுக ஆட்சியில் அம்மா சிமெண்ட் குறைந்த விலையில் வழங்கப்பட்டது. திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடங்கியுள்ளது. திமுக அரசு எதுவும் செய்யவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்க துறை நடவடிக்கை குறித்த கேள்விக்கு, டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...