மேட்டுப்பாளையம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் - பரபரப்பு!

மேட்டுப்பாளையம் அடுத்த பெள்ளேபாளையம் பகுதி மக்கள் தங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள சிறுமுகை - அன்னூர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முறையான, சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் காலி குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் பெள்ளேபாளையம் ஊராட்சி உள்பட மொத்தம் 13 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு பவானி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வந்து விநியோகம் செய்யப்படுகிறது. 

அவ்வாறு கொண்டு வரப்படும் நீர் சுத்தமான நீராக இல்லாததால், இரும்பறை ஊராட்சியில் உள்ள சிட்டேபாளையம் நீரேற்று கிணற்றில் தண்ணீர் நிரப்பி அங்கு 3 அடுக்கு முறையில் தண்ணீரை சுத்திகரிக்கப்படுகிறது. அதன் பின் ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம், இலுப்பநத்தம், இரும்பறை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் பவானி ஆற்றில் இருந்து சிட்டேபாளையத்திற்கு வரும் தண்ணீர் சுத்தமாக வருவதில்லை என்றும், அருகே உள்ள குட்டை நீர் சிட்டேபாளையம் நீரேற்று நிலையத்தில் கலந்து பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் தண்ணீர் வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. 

இதையடுத்து இன்று காலை பெள்ளேபாளையம் ஊராட்சியை சேர்ந்த வெள்ளிகுப்பம்பாளையம், எஸ்.ஆர்.எஸ்.நகர் தென்பொன்முடி, எலகம்பாளையம், வடபகத்தூர், எஸ்.எஸ்.நகர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள சிறுமுகை-அன்னூர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் சிவக்குமார், அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆய்வாளர் நித்யா திடீரென மறியலில் ஈடுபட்டிருந்த ஒருவரை பிடித்து இழுக்க முயற்சித்தார்.

இதனைப் பார்த்த சக பொதுமக்கள், ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மறியல் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் தொடர்ந்தது.

இதன் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...