சமூக வலைத்தளத்தில் திமுக குறித்து அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர் கைது!

2021ஆம் ஆண்டு நடந்த கள்ளச்சாராய கைது சம்பவத்தை தற்போது நடைபெற்றதாகவும், திமுகவினர் கைது செய்யப்பட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாஜக ஆதரவாளரான சரவணபிரசாத் என்பவரை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்: சமூக வலைதளத்தில் தி.மு.க. குறித்து தவறான தகவல் பரப்பியதாக பா.ஜ.க. ஆதரவாளரை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லடம் அடுத்த கரைப்புதூர் குன்னாங்கல்பாளையத்தை சேர்ந்த திமுக இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் திருப்பூர் மாவட்டம் அவினாசி செம்பாக்கவுண்டம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அவினாசி மதுவிலக்கு போலீசார் 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து தினசரி நாளிதழ்களில் கடந்த 28-5-2021 அன்று செய்தி வெளியானது. இந்தநிலையில் சரவணபிரசாத் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அவினாசியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுகவினர் 5 பேர் கைது என்ற தலைப்பிட்ட செய்தியை பதிவு செய்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த செய்தியை தவறாக சித்தரித்து திமுக கட்சிக்கும், கட்சியினருக்கும் பொதுமக்கள் மத்தியில் களங்கப்படுத்தும் விதமாக திமுகவினர் கைது செய்யப்பட்டதை போல் தகவல் பரப்பிய சரவணபிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் நேற்று சரவணபிரசாத்தை (52) கோவையில் கைது செய்தனர்.

இவர் காஞ்சிபுரம் அடுத்த பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த இவர், பாஜக ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. சரவண பிரசாத் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் நேற்றிரவு திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

மேலும், பொய் வழக்கு போட்டு சரவணபிரசாத் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...