கோவை கணபதியில் ஆறுமுக வேலவர் திருக்கோவிலில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு விழா!

கோவை கணபதி பகுதியில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக வேலவர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா திருநெறிய தமிழ் முறைப்படி கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: கணபதி பகுதியில் உள்ள ஆறுமுக வேலவர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா திருநெறிய தமிழ் முறைப்படி கோலகலமாக நடைபெற்றது.



கோவை கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்த கலச விநாயகர் கோவில், திருமண பாக்கியம், குழந்தை வரம், மற்றும் கல்விக்கண் திறப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக அப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. 

இந்நிலையில், இக்கோவில் வளாகத்தில் தமிழ் கடவுளாம் ஆறுமுக வேலவ பெருமானுக்கு தனி கருவறை அமைக்கப்பட்டு, முருகனுக்கு உகந்த நாளான வைகாசி திங்களன்று திருநெறிய திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 



திருக்குட நீராட்டு பெருவிழாவை முன்னிட்டு 108 தீர்த்த குடங்கள் ஊர்வலம், கவுமார மடாலயம் சிரவை ஆதீன அருட்பணி மன்றத்தினர் முன்னின்று நடத்திய இரண்டு கால வேள்வி வழிபாடு கடந்த இரு நாட்களாக நடைபெற்றது.



தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.



முன்னதாக, சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டு, திருக்குடங்கள் கோயிலை வலம் வந்து விமான கலசத்திற்கு எடுத்து சென்று புனித நீர் ஊற்றப்பட்டது.



இதில் கோவை கணபதி மணியகாரம்பாளையம், ராக்காட்சி கார்டன், பிருந்தாவன் நகர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...