கோவை எஸ்.பி தலைமையில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்!

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தலைமையில் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக எஸ்.பி-யிடம் அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.



கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை உள்ள காவல் துறையினருக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. 



இக்குறைதீர்க்கும் முகாமில் காவல்துறையினர் சுமார் 183 பேரிடம் காவல் கண்காணிப்பாளர் குறைகளைக் கேட்டறிந்தும், அவர்களிடம் இருந்து குறைதீர்க்கும் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.



அம்மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு உத்தரவு வழங்கினார். 



மேலும், மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...