ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்திற்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடக்கம்!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தலின் படி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்திற்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வன விலங்குகளின் கால் தடங்கள், கீறல்கள், எச்சங்கள், பதிவு செய்து கணக்கெடுக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்துக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி, மற்றும் உடுமலை, அமராவதி என உள்ளிட்ட 6 வன சரகங்கள் உள்ளன. இதில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை மற்றும் அரிய வகையான பறவைகளும் என பலதரப்பட்ட வனவிலங்குகள் உள்ளன.

ஆண்டுதோறும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டுக்கான மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் பொள்ளாச்சி வனக்ககோட்டத்திற்கும் உடுமலை வனக்கோட்டத்திற்கும் உட்பட்ட 6 வனச்சரகங்களில் 115 நேர்கோட்டுப் பாதை அமைக்கப்பட்டு 460 வனத்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பணியில், வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கணக்கெடுப்பு பணியில், மாமிச உண்ணி, தாவர உண்ணி சார்ந்த வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள், நகக்கீறல்கள், நேரடிப் பார்வை என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுப்படி மொபைல் போன் ஜிபிஎஸ் மூலம் பதிவு செய்து கணக்கெடுக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

8 நாட்கள் நடைபெறும் இந்த வனவிலங்கு கணக்கெடுப்பில் முதல் நாள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்களுக்கு அட்டகட்டி பயிற்சி மையத்தில் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு மாமிசம் மற்றும் தாவர உண்ணி வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் மீதமுள்ள மூன்று நாட்களுக்கு வனவிலங்குகளுக்கு தேவையான தாவரங்கள் ஆகியவை கணக்கிடப்படுகிறது.



இவை அனைத்தும் பதிவு செய்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலருமான ராமசுப்ரமணியன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் நடைபெறும் வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பது வழக்கம் ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வரும் கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...