கோவையில் தொடர்ந்து 3 மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்காத பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம்!

கோவை மாநகராட்சியின் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா, மாநகராட்சியில் நடைபெற்ற கடந்த மூன்று கூட்டங்களில் பங்கேற்காததால் அவரது பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார். அடுத்த கூட்டத்தில் அவரது விளக்கத்தை தொடர்ந்து தகுதி நீக்கத்தை உறுதி செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: தொடர்ந்து 3 மாநகராட்சி கூட்டத்திற்கு வராத 97வது வார்டு பெண் கவுன்சிலர் நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியில் 97வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நிவேதா. இவர் மாநகராட்சி கூட்டங்களுக்கு நிவேதா வருகை தருவது இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவுன்சிலர் நிவேதா கடந்த ஜனவரி 30, மார்ச் 31-ந் தேதிகளிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது.

தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்து கொள்ளாததால் கவுன்சிலர் நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.

அடுத்த கூட்டத்தில் தகுதி நீக்கம் குறித்து மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கவுன்சிலர் நிவேதா அளிக்கும் விளக்கத்தை மாநகராட்சி கூட்டம் ஏற்றுக்கொண்டு, ஒருமனதாக அனுமதி அளித்தால் அவர் கவுன்சிலராக பதவி நீடிக்க வாய்ப்பு உள்ளது.

இல்லாவிட்டால் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகிவிடும். மாநகராட்சி சட்டம் 1998 பிரிவு 32 (1)-ன் படி 3 கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளாவிட்டால் தகுதி நீக்கம் செய்ய அனுமதி அளிக்கிறது.

அதேநேரம் சட்டப்பிரிவு 32 (4) தகுதி நீக்கத்தை இறுதி செய்வது மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அளிக்கிறது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...