பூச்சியூர் அருள்மிகு ஸ்ரீ வேட்டக்காரசாமி கோவிலில் பெரிய சுவாமி திருவிழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் அருள்மிகு ஸ்ரீ வேட்டக்காரசாமி திருக்கோவிலில் 12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெரிய சுவாமி திருவிழா நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.



கோவை: நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் அருள்மிகு ஸ்ரீ வேட்டக்காரசாமி திருக்கோவிலில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் அருள்மிகு ஸ்ரீ வேட்டக்காரசாமி திருக்கோவிலில் பெரிய சுவாமி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் அருள்மிகு பொன்னார்,சங்கர்,தங்காள், செல்லாண்டியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பெரிய சுவாமி திருவிழா நடைபெறும்.



கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் பொன்னர்,சங்கர்,தங்காள் வீர வரலாறு உடுக்கை கதை, பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தொடர்ந்து பூச்சியூர் விநாயகர் கோவிலிலிருந்து சக்தி கரகம் அழைத்தல், சாம்புகன் சாமியை மேடைக்கு அழைத்து வருதல், தங்காளுக்கு கிளி பிடிக்கச் செல்லுதல்,



கொம்பனை சாம்புகன் சாமி மேடைக்கு அழைத்து வருதல், செம்மறி ஆட்டுக்கிடாவுடன் மேளதாளம் முழுங்க பறை சாற்றி வருதல் தங்காள் செல்லாண்டியம்மன் தீர்த்தம் எடுத்து வந்து தெளித்து அண்ணன்மார்களை எழுப்புதல் நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றன.



இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர், இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக கொம்பனை குறி வைத்தல் நிகழ்ச்சியில் பன்னியை வேல்கொம்பு கொண்டு பூசாரி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.



சாம்புகன் பூஜை செய்து தீர்த்தம் வழங்கி கிடாவெட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.

இறுதியாக சாமியை ஊர்வலமாக எடுத்து வந்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் 2 நாட்களுக்கு முன்பே இங்கு வந்துள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...