மாச்சம்பாளையத்தில் 200 ஆண்டுகள் பழமையான மயானம் - குப்பைமேடாக மாறிவரும் அவலம்!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மாச்சம்பாளையம் பகுதியில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயானம் தற்போது குப்பை மேடாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை அடுத்த மாச்சம்பாளையத்தில் உள்ள மயான பகுதி குப்பை மேடாக காட்சியளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாச்சம்பாளையத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயானம் ஒன்று உள்ளது. இந்த மயானத்தை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அந்த மயானம் முழுவதும் குப்பைமேடாக காட்சி அளிக்கிறது. இரும்பு கழிவுகளும், பஞ்சு கழிவுகளும் குவியல், குவியலாக குவிக்கப்பட்டு உள்ளது. சிறிது மழை பெய்தாலும் அந்த குப்பை மேட்டில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது. மேலும் இப்பகுதியில் நள்ளிரவு நேரங்களில் சமூக விரோதிகளின் ஆதிக்கமும் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுப்பழக்கமும், கஞ்சா பழக்கமும் இரவு நேரங்களில் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.

விரைவில் அந்த குப்பைமேடுகளை அகற்றி சுத்தமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...