பாஜக கூட்டணிக்கு திருமாவளவன் வரவேண்டும் - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அழைப்பு!

திமுக கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு உரிய நீதி கிடைக்காது என்பதை 2 ஆண்டுகளாக பார்த்து வரும் திருமாவளவன், பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: சமூக நீதிக்கு எதிரான கட்சி தான் திமுக என்றும் அந்த கூட்டணியை விட்டுவிட்டு பாஜக கூட்டணிக்கு திருமாவளவன் வரவேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.



கோவை காந்திபுரம் பகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.



இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்து அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாடம் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது,



தொகுதியில் இனி கட்டப்படும் அங்கன்வாடிகளுக்கு சோலார் திட்டம் வைத்துள்ளோம். அங்கன்வாடி மையங்களுக்கு அரசு அதிக கவனம் கொடுக்க வேண்டும். கர்நாடக தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம். ஆட்சி அமைக்க முடியாததற்கான காரணத்தை கட்சி ஆராயும்.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பை பூரணமாக நிறைவேற்றும் வகையில் கர்நாடக தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்துகிறது. மக்களிடம் நெருக்கமான அணுகுமுறைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த தேர்தல் முடிவு உள்ளது. தோல்விக்கு குறிப்பிட்ட காரணம் என்று சொல்ல முடியாது.

திமுக எத்தனை முறை துடைத்தெறியப்பட்டுள்ளது. திராவிட நிலப்பரப்பு என்று மற்ற மாநில முதல்வர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வார்த்தை அலங்காரத்திற்கு பயன்படுத்துகிறார். காங்கிரஸ் ஏன் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த மாநிலத்தில் தோல்வியுற்றனர் என்பதை கவனிக்கட்டும்.

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். திமுக எத்தனை முறை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. டபுள் டிஜிட்டில் கூட இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளனர். பாஜகவின் வழக்கமான வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் நடந்தது என்ன? ஏன் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு அவ்வளவு அமைச்சர்களை வைத்து வேலை செய்தார்கள். தோல்வியின் காரணங்களை ஆராய்வோம். சரி செய்ய முயற்சிப்போம்.

சொந்தத் தொகுதியில் தோற்கப் பல காரணம் இருக்கலாம். சி.டி ரவி தோல்வியுற்றதால் தமிழ்நாட்டை வழிநடத்த முடியாது என சொல்ல முடியாது. அண்ணாமலை அவர் பங்களிப்பை மிக சிறப்பாக செய்துள்ளார். மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். பாராளுமன்றத் தேர்தலுக்கு கர்நாடகத்தின் தோல்வி பிரச்சனையாக இல்லை.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கவில்லை. அப்போதும் முழுமையாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவினர் ஜெயித்தனர். மீண்டும் பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பளிப்பார்கள். பாஜக ஆட்சி நூறு சதவீதம் உறுதி.

திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை 2 ஆண்டுகளாக பார்த்து வருகிறார். எந்த பட்டியல் இன பிரச்சனைக்கும் தீர்வு காண முடியவில்லை. எதற்காக திருமாவளவன் அங்கு உள்ளார். திருமா சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். வாரிசு அரசியல், குடும்ப அரசியல் தான் திராவிட மாடல் என நிரூபிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...