கோவையில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய காவலர் பணியிடை நீக்கம்!

போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய காவலர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேரையும் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை நகரில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை நகரில் பல்வேறு பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை மருந்து விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த சுஜி மோகன் (26) புல்லி பிரவீன் (26), பிரசாந்த் (26), அமர்நாத் (25) மற்றும் அஸ்வின்குமார் (26), பிரவீன்ராஜ். (27), வடவள்ளி பிரதீப் (26) ஆகிய 7 பேரை கோவை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த காவலர் ஸ்ரீதர் (29) திட்டம் போட்டுக் கொடுத்து கடத்தல் மற்றும் விற்பனைக்கு உதவியது தெரியவந்தது. மேலும் காவலர் ஸ்ரீதர் போதை கும்பலுடன் வாட்ஸ் அப் காலில் பேசி வந்துள்ளார்.

மேலும் அவர், போலீசார் எங்கு எப்போது ரோந்து வருவார்கள்? போதை மருந்தை எப்படி கடத்தி வர வேண்டும்? யாரிடம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்? என திட்டமிட்டு வகுத்து கொடுத்து போதை கும்பலை வழி நடத்தியுள்ளார்.

போதை கும்பலை சேர்ந்த சுஜி மோகன் உள்ளிட்டோர் வாட்ஸ் அப் காலில் ஸ்ரீதர் பேசியதை மற்றொரு செல்போனில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவு போலீசாரின் விசாரணையின் போது சிக்கியது. ஸ்ரீதர் போதை மருந்து, கஞ்சா கடத்தல் கும்பலிடம் சமீபத்தில் ரூ.1.60 லட்சம் வாங்கியதும், அந்த பணத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஜாலியாக செலவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், காவலர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது செல்போன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவருக்கும் ரவுடிகள், போதை கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.



இதனிடையே காவலர் ஸ்ரீதர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிறையில் உள்ள காவலர் ஸ்ரீதரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் போதை கும்பலுடன் தொடர்பில் இருந்து உதவிய போத்தனூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த வக்கீல் ஆசிப் (24) கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் போதை மருந்து விற்பனை கும்பலுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளார். மேலும் அவர் போதையில் நடனமாடிய வீடியோக்களும் சிக்கியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...