குறைந்த பட்ச ஆதார விலைக்கு கொப்பரை கொள்முதல் செய்க..! - எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொப்பரை தேங்காய் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் மனு அளித்துள்ளார்.


கோவை: குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொப்பரை தேங்காய் முழுவதையும் கொள்முதல் செய்ய அதிமுக எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கோவையில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தலைமையில் தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பொள்ளாச்சி ஜெயராமன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கு கரும்பு, நெல் முழுமையாக கொள்முதல் செய்வது போல தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரை தேங்காயையும் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1,164 கிலோவாக மாற்றி கொள்முதல் செய்ய வேண்டும்.

கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான சாக்குகள் கிடைக்காமல் இருப்பதை சரி செய்ய வேண்டும். கொப்பரை தேங்காயை இருப்பு வைப்பதற்கு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும்.

கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைகளை காலியாக உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களான பெதப்பம்பட்டி, அவினாசி, சேவூர், வடக்கிப்பாளையம் ஆகிய கிடங்கில் வைக்க வழிவகை செய்து கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காய் முழுவதையும் எண்ணையாக மாற்றி ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.

பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்கள் அனைத்திற்கும் போதுமான குடிநீர் விநியோகம் செய்வதற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பணிகள் முடிந்த பின்னரும் கிராமங்களுக்கு மோசமான குடிநீர் செல்கிறது. எனவே குடிநீர் விநியோகத்தை சரி செய்ய வேண்டும். பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அரசு டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் பார்களில் நடைபெறும் சில்லிங் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் அளித்த மனுவில் கூறியிருந்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...