கோவையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்!

கோவை வடவள்ளியை சேர்ந்த சுவாமிநாதன்-ஜெயசுதா தம்பதிக்கு நிரஞ்சன், நிவேதா என இரட்டை பிள்ளைகள் உள்ளனர். இருவரும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வடவள்ளியில் இரட்டையர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவன்யூவை சேர்ந்தவர்கள் சுவாமிநாதன்-ஜெயசுதா தம்பதி. இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். மேலும் இருவரும் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் நிரஞ்சன் மற்றும் நிவேதா ஆகிய இரண்டு பேரும் 600 மதிப்பெண்ணுக்கு 530 மதிப்பெண்கள் என ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

சிறுவயதிலிருந்தே பல விஷயங்களில் ஒற்றுமையாக இருந்தாலும், படிப்பு விஷயத்தில் போட்டிப் போட்டு படிக்கும் இருவரும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர்.

நிரஞ்சன் கம்ப்யூட்டர் சயின்ஸ், நிவேதா பிசினஸ் மேக்ஸ் என இருவரும் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் படித்தாலும், வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுத சென்றாலும் இறுதியாக வந்த மொத்த மதிப்பெண்ணை ஒரே மாதிரியாக எடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இருவரில் யார் பெரியவர்? யார் திறமைசாலி என்கின்ற போட்டிக்கு இடமில்லாமல் இருவரும் சமம் என்பதை குறிக்கும் வகையில் மதிப்பெண் வெளியாகி உள்ளதாகப் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...