துடியலூரில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு, ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மார்ட்டின் குழும நிறுவன அலுவலகங்கள் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளா, சிக்கிம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சில நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டு லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த மாநிலங்களில் நடைபெற்று வரும் லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மார்ட்டின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த சில ஆண்டுகளில் 2 முதல் 3 முறை சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்நிலையில் மீண்டும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் உள்ள மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 11 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



முன்னதாக கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனை வெள்ளகிணறு பிரிவு பகுதியில் உள்ள அவரது வீடு ஆகியவற்றிலும் தனித்தனியே அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் உதவியுடன் இந்த மூன்று இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையின் காரணமாக வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெளி ஆட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கேரள மாநிலத்தை சேர்ந்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...