மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


கோவை: மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக குகி-மெய்ட்டி என்ற இரு பிரிவினர்களுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின. இதனை தடுக்க அரசும் இராணுவத்தை இறக்கி பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த கலவரத்தில் குகி பிரிவினரின் தேவாலயங்களை மெய்ட்டி மக்கள் குறிவைத்து தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இந்த தாக்குதலில் தற்போது வரை 25-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தாக்கப்பட்டு உள்ளதாகவும் மூன்று தேவாலயங்கள் தீவைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்நிலையில் கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் எஸ்டிபிஐ கட்சியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, அங்கு நிலவும் மத மோதல்களுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இதில் பெண்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...