கோவையில் ட்ரோன் கேமரா மூலம் கண்ணீர் புகை குண்டு வீசி ஒத்திகை!

கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்ட நிலையில், அந்த டிரோன்களில் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்தி வீசும் ஒத்திகை நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.


கோவை: கோவையில் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசும் ஒத்திகை நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.

கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர் புகை குண்டு வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது இன்று கோவை காவல் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், போலீசார் கலவரக்காரர்கள் போல ஒன்றுகூடி போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது, ட்ரோன் மூலம் அந்த இடத்திற்கு சென்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்வை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, இந்த ட்ரோன்கள் மூலம் கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு சென்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முடியும். ஒரே நேரத்தில் 4 கண்ணீர் புகை குண்டுகளை வீச முடிவதுடன், 2 நிமிடத்தில் மாற்றுக் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்திக் கொள்ள முடியும்.

மேலும் இந்த ட்ரோன்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை துல்லியமாக கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்கவும் முடியும்.

தப்பியோடி செல்பவர்களையும் ட்ரோன் மூலம் பின் தொடர்ந்து சென்று அவர்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை எடுக்க முடியும். தமிழகத்தில் காவல்துறையில் ட்ரோன்கள் பயன்படுத்துவது கோவையில் தான் முதல் முறை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...