சிறுவாணி தடுப்பணை விவகாரத்தில் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை..! - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சிறுவாணி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்திற்கு தீர்வு காண நீர்வளத்துறை அமைச்சர் நீதிமன்றம் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கோவையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 1010.19 கோடி மதிப்பீட்டில் ஆன வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



முதலில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் பந்தய சாலையில் 40.67 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலைகள் அமைத்தல் பணியை அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து வ.உ.சி மைதானத்தில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



அதன்படி, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 1.72 கோடி மதிப்பீட்டில் 2 எண்ணிக்கையிலான சாலையில் தேங்கும் மணல் குப்பைகளை அகற்ற செய்யும் வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 7.86 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 105 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.



மாநகராட்சி பொது நிதியின் கீழ் 2.53 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 100 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 2023-24 ஆண்டு 96 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள காசோலை வழங்குதல் போன்ற பணிகள் தொடங்கப்பட்டன.

அதேபோல வடவள்ளி வீரகேரளம் கவுண்டம்பாளையம் துடியலூர் போன்ற பகுதிகளுக்கு ரூபாய் 860.80 கோடி மதிப்பீட்டில் பாதாளை சாக்கடை திட்டப் பணி அடிக்கல் நாட்டுதல், வெள்ளலூர் பேரூராட்சியில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,சிறுவாணி அணையில் தடுப்பணை கட்டப்படுவது தொடர்பாக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளா அரசுக்கு நாங்களும் இயக்கத்தை சேர்ந்த தோழர்களிடம் சொல்லியுள்ளோம். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வருகிற பணிகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சிறுவாணி தடுப்பணை விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் நீதிமன்றம் செல்ல நடவடிக்கையும் எடுத்து வருகிறார், என்றார்.



இந்த நிகழ்ச்சியின்போது, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் பலரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...