வால்பாறையில் காட்டு யானைகள் 3வது நாளாக நடமாட்டம் - வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மூன்றாவது நாளாக உலாவரும் காட்டு யானைகள் அங்குள்ள கோவில், குழந்தைகள் காப்பகம் போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதியில் உலாவரும் யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து, வீடுகள், மளிகை கடைகள், ரேஷன் கடைகள், போன்றவைகளை உடைத்து உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு செல்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.யானைகள் மனித மோதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்நிலையில், வால்பாறை அருகே பண்ணிமேடு எஸ்டேட் பகுதிகளில் 7 காட்டு யானைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக அப்பகுதியில் உள்ள கோவில், குழந்தைகள் காப்பகம் ஆகிய கட்டிடங்களை இடித்து சேதப்படுத்தியது. யானைகள் நடமாட்டம் கண்டறிந்து வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதனிடையே வால்பாறைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, யானைகள் கோவிலை உடைத்ததை அறிந்து அப்பகுதிக்குவந்து மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.வனத்துறையினரிடம் வன பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், இது குறித்து சட்டசபையில்பேசி குடியிருப்பு பகுதிகளை சுற்றி மின் வேலி, அகழி போன்றவைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அவர் தெரிவித்து சென்றார்.

யானைகள் நடமாட்டம்இருப்பதால் மக்கள் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...