வால்பாறை வனப்பகுதியில் அமைச்சர் ஆய்வு - பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவி!

கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு நடத்தினார். அப்போது, அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடியின மக்களுக்கு தையல் மிஷின், பண உதவி ஆகியவற்றை வழங்கினார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.



அப்போது, அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடியின மக்களுக்கு தையல் மிஷின் பண உதவி ஆகியவற்றை ஐந்து பேருக்கு வழங்கினார்.



கீழ்புனாச்சி ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழும் இடத்தில் வனப்பகுதிக்குள் புதர்போல் காணப்படும் உன்னி செடியிலிருந்து சேர் டேபிள் அழகு பொருட்கள் போன்ற கைவினைப் பொருட்கள் தயாரித்து வருகின்றனர்.



அதை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டு, அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பண உதவி மற்றும் பொருள் உதவிகளை வழங்கினார். ஆதிவாசி பழங்குடியினர்களுக்குதண்ணீர் வசதி, பொருள்கள் தயாரிக்கும் இடத்திற்கு செட், உன்னி செடிகளை கொண்டு வருவதற்கு வாகன வசதி ஆகியவைகளை வனத்துறை அமைச்சரிடம் ஆதிவாசி பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதை முதல்வர் அறிவுறுத்தலின் பேரில்கண்டிப்பாக செய்து தருவதாக அமைச்சர் மதிவேந்தன் உறுதி அளித்தார்.



அதன்பின்பு, சில தினங்களுக்கு முன்பு டாப்சிலிப் மானாம்பள்ளி வனப்பகுதிக்குள்இரவில் அபூர்வமாக காணப்பட்ட மின்மினி பூச்சி காணொளியை பார்வையிட்டு அதைப் புகைப்படம் எடுத்த ஸ்ரீராம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார்.

மேலும் வனத்துறை சார்பாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதியையும் அவர் ஆய்வு செய்தார். ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தருவதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...