கோவையில் 1,234 சைபர் கிரைம் புகார்கள் பதிவு - மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தகவல்

கோவை மாவட்டத்தில் நடபாண்டில் மட்டும் சைபர் கிரைம் பிரிவில் 1,234 புகார்கள் வந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். காவல்நிலையங்களில் பெறப்படும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில், சைபர் கிரைம் தொடர்பாக, 1,234 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சைபர் கிரைமில் மோசடி, ஏமாற்றுதல் என புகார்கள் அதிகமாகி வரு கிறது. நடப்பாண்டில் சைபர் கிரைமில், 1,234 புகார்கள் பெறப்பட்டு விசாரிக்கப்படுகிறது. அதில், 5 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது 4.61 கோடி வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தர குவிந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் சுமார், 1700 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக் கப்பட்டது. எஸ்.பி., அலுவலகத்தில்அளிக்கப்படும் புகார் மனுக்கள், 5 நாட்களில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறைதீர்ப்பு முகாம்களில் பெறப்படும் புகார்களுக்கு, விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அளவில் ரவுடிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 343 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 285 ரவுடிகள் எந்த குற்றமும் செய்யமாட்டோம்" என பிணை பத்திரம் எழுதி தந்துள்ளனர். 48 ரவுடிகள் சிறையில் உள்ளனர். ஜாமீனில் வந்துள்ள ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்.

கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதில், கோவை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விசாகப்பட்டணம், பெங்களூரு ஆகிய இரு இடங்களில் இருந்து, அதிகளவு கஞ்சா கடத்தி வருகின்றனர்.

மாவட்ட அளவில், 145 கல்லுாரிகளில் வருகிற, 8ம் தேதி முதல், போதை பொருட்கள் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள, 11 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி முறையாக நடக்கிறது. இ - பீட் மூலமாக ரோந்து பணிகள் முறைப்படுத்தப்பட்டு, விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....