உடுமலையில் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பாராட்டு விழா - வழக்கறிஞர் சங்கம் ஏற்பாடு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய நீதிபதியாக பதவி ஏற்றுள்ள வடமலை மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. வழக்கறிஞர் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ள, நீதிபதி வடமலை மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா, திருப்பூர் மாவட்டம் உடுமலை வழக்கறிஞர் மன்றம் சார்பில் நடத்தப்பட்டது.

உடுமலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு வந்தவர்களை உடுமலை பார் வழக்கறிஞர் மன்ற தலைவர் மனோகரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் நீதிபதி வடமலை பேசுகையில், உடுமலையில், பிறந்து, அரசு பள்ளி, கல் லுாரியில் படித்து, இன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளேன். அந்த காலத்தில், சீனியர் வக்கீல்கள், சிறிய நோட் புத்தகத் தில், வழக்கு சம்பந்தமான அனைத்து தகவல்கள், ஆதரவாக வந்துள்ள தீர்ப்புகள், சட்ட நுணுக்கங்களை வைத்திருந்தனர்.



இன்று கம்ப்யூட்டரை தட்டினால், அனைத்து தகவல்களும் கிடைத்து விடுகிறது. இளம் வக்கீல்கள், படித்து முடித்ததும், அலுவலகம் திறந்து, வழக்காட வேண்டும் என நினைக்க வேண்டாம். குறைந்தபட்சம், 3 ஆண்டுகளாவது சீனியர் வக்கீல்களிடம், வக்கீல் தொழிலை நன்கு கற்க வேண்டும்.

அதேபோல், நீதிபதிகளுக்கான காலிப்பணியிடங்கள் அதிகளவு உள்ளது. இளம் வக்கீல்கள், நீதிபதிக்கான தேர்வுகள் எழுத முன்வர வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.



இந்த விழாவில், திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் ஜெ நடராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி நாகராஜன், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி புகழேந்தி மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...